தருமபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி சிக்ளூர் நரிப்பள்ளி கோட்டப்பட்டி பையர்நாய்க்கன்பட்டி தீர்த்தமலை வேடகட்டமடுவு வேப்பம்பட்டி மாம்பாடி நாதியானூர் முத்தானூர் கௌாப்பாறை கீரைப்பட்டி ஆகிய பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதையடுத்து அரூர் பழையப்பேட்டைக்கு பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி வாக்கு சேகரிக்க வருகைதந்தார் அப்போது பேரூராட்சி உறுப்பினரும் நகர செயலாளருமான பேக்கரி பெருமாள் தலைமையில் பெண்கள் ஆரத்தி எடுத்து வாணவேடிக்கையுடன் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அரசாங்கம் உழவர் பேரியக்க மாநில செயலாளர் இல.வேலுசாமி செந்தில் அரூர் ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல் சேகர் பேரூராட்சி உறுப்பினர் அன்புமணி ஊடக பேரவை மாவட்ட இணை செயலாளர் வெங்கடேஸ்வரன் பேக்கரிபிரபு ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக