பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய ஆங்கிலத் துறையில் உலக நாடக தினத்தை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 27 மார்ச், 2024

பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய ஆங்கிலத் துறையில் உலக நாடக தினத்தை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவு.


தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத் துறையின் சார்பாக உலக நாடக தினத்தை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவு  நடத்தப்பட்டது. இதில் சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரி ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் திரு. நந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  'நாடகத்தின் பரிணாம வளர்ச்சி: வரலாற்றின் ஊடே ஒரு பயணம்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.  இவர் தனது உரையில் நாடகத்தின் ஆதி கால தோற்றத்தை பற்றியும் தற்கால வளர்ச்சியை பற்றியும் நாடகங்கள்  இலக்கியத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களைப் பற்றியும் சிறப்புற எடுத்துரைத்தார்.

முன்னதாக மாணவி ஷைனி இந்நாள் கொண்டாடப்படுவதற்கான காரணத்தை பற்றியும் மாணவி காவியா தமிழ் இலக்கியத்தின் நாடக தோற்றம் பற்றியும் பேசினர். முன்னதாக இந்நிகழ்வில் ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) முனைவர் மோகனசுந்தரம் தலைமை உரையாற்றினார். தொடர்ந்து நிகழ்வு ஒருங்கிணைப்பாளரும் துறை தலைவருமான பேராசிரியர். கோவிந்தராஜ் துவக்க உரையாற்றினார்.‌ உதவி பேராசிரியை முனைவர் கிருத்திகா வாழ்த்துரை வழங்கினார். மாணவி ஹாசிரா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.  நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் மாணவி ஜனனி வரவேற்று பேசினார். இறுதியாக முதலாம் ஆண்டு மாணவி ஸ்ரீதா நன்றி உரை வழங்கினார். இந்நிகழ்வை முதலாமாண்டு  மாணவி விஜய்ஸ்ரீ தொகுத்து வழங்கினார். 


இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கௌரவ விரிவுரையாளர்கள் சரண்யா மற்றும் மீனா,  மாணவிகள் லாவண்யா மற்றும் செந்தாமரை ஆகியோர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad