பாலக்கோட்டில் தர்மபுரி நாடளுமன்ற திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைப்பெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 23 மார்ச், 2024

பாலக்கோட்டில் தர்மபுரி நாடளுமன்ற திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைப்பெற்றது.


தர்மபுரி மாவட்டம். பாலக்கோடு, தனியார் மண்டபத்தில் தர்மபுரி திமுக நாடளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைப்பெற்றது.


தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக  திமுக மாவட்ட துணை செயலாளர் வக்கில் ஆ.மணி யை திமுக தலைவர், தமிழக முதல்வர்  ஸ்டாலின் அறிவித்தார். அதனை தொடர்ந்து பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைப்பெற்றது. இக் கூட்டத்திற்க்கு திமுக தர்மபுரி  மேற்கு மாவட் செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் முன்னிலை வகித்து வரவேற்புரை ஆற்றினார்.


இக் கூட்டத்தில் வேட்பாளர் ஆ.மணி அவர்களை அறிமுகப்படுத்தி வைத்து  பேசிய அமைச்சர் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்று 3 வருடத்தில் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை, இலவச பஸ் வசதி, கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தமிழக மக்களுக்கு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்.


மேலும் தர்மபுரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஜப்பான் நாட்டு உதவியுடன் ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த முயற்சி மேற் கொள்ளப்பட்டு வருகிறது, மேலும் தூள் செட்டி ஏரி, எண்ணேகொல்புதூர், புலிக்கரை இடதுபுறகால்வாய் திட்டம் உள்ளிட்ட நீர் வழிகால்வாய் திட்ட பணிகள் விரைவாக நடைப்பெற்று வருகிறது, தமிழக மக்ககளுக்கு நன்மைகள் செய்யும் ஓரே கட்சி திமுக எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் ஆ.மணிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


இக்கூட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், எம்.வீ.டி.கோபால், முனியப்பன், இல.கிருஷ்ணன், அடிலம் அன்பழகன், பேரூராட்சி தலைவர்கள் பி.கே.முரளி, வெங்கடேசன், மனோகரன், நகர செயலாளர் சீனிவாசன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.பி. தீர்த்தராமன், மற்றும் இந்திய கம்யூனிஸ்டு குமார், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்டு கலைசெல்வம், விடுதலை சிறுத்தை தலைவர் கருப்பண்ணன், மதிமுக இராமதாஸ், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆனந்தகுமார், மனிதநேய மக்கள் கட்சி சுபேதார், ஆம்ஆத்மி தின்னரசு, மக்கள் நீதி மய்யம் வெங்கடேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad