நல்லானூர் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் பரஞ்சோதி, மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மகேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகுசாமி, சின்னபள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனி, நல்லம்பள்ளி சீட்ஸ் தொண்டு நிறுவன இயக்குநர் சரவணன், சமூக நல அலுவலகம் சார்பில் திருமதி அனந்தி, ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர். தமிழர் தற்காப்பு கலை பயிற்சி நிறுவனத்தின் தலைவர் சண்முகம் தலைமையில் சிலம்பாட்டம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் மாவட்ட இளைஞர் அலுவலர் பிரேம் பரத்குமார் வரவேற்றுப் பேசினார். சிறுதானியம் பயன்பாடு, மகளிர் நலன், வளர்ச்சியடைந்த பாரதம் உள்ளிட்ட தலைப்புகளில் கருத்துரையினை மாநில பயிற்றுநர்கள் திரு.பெரியசாமி திரு.கருணாமூர்த்தி திரு.பெருமாள் வழங்கினர். மேலும் நிகழ்ச்சியில் மாதிரி பாராளுமன்ற நிகழ்ச்சி அமைக்கப்பட்டு செயல்படுத்தி காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் 800க்கும் மேற்ப்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள், நேரு யுவ கேந்திராவின் தேசிய இளைஞர் தொண்டர்கள் தமிழர்கள் காப்பு கலை பயிற்சி நிறுவனத்தின் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நிறைவாக நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக