பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது, அதனை தொடர்ந்து குத்துவிளக்கு பூஜை, வள்ளி தெய்வானை திருமணத்தை தொடர்ந்து, முக்கிய நாளான இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, பக்தர்கள் அலகு குத்தியும், கரகம் எடுத்த்தும், பால்குடம் எடுத்தும், தங்களது தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.
இந்த வீதி உலாவானது கோயிலில் தொடங்கி தக்காளி மார்க்கெட், கடைவீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதி வழியாக சென்றது, இதில் பக்தர்கள் காவடி ஆட்டம் ஆடியும், குழந்தைகள் முருகன் வேடம் அணிந்தும் சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் கவுண்டர் குடும்ப வகையறாக்கள், பழனி கவுண்டர் குடும்பத்தினர் விழாக்குழுவினர் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக