தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி அருகே உள்ள கள்ளு காரமடை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(எ) பிரசாந்த் இவர் பாலக்கோடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக பணியாளர் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் இவருக்கு 2016 ஆம் ஆண்டு தர்மபுரி அருகே உள்ள அண்ணாசதரம் எரங்காட்டு கொட்டாய் பகுதியைச் சார்ந்த மாரிமுத்து மகள் அமுதா 25 என்பவரை திருமணம் செய்துள்ளார் இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.
இந்நிலையில் இவர் பணிக்குச் செல்லும்போது வழக்கமாக பச்சனம்பட்டியில் உள்ள தனது தம்பியின் கார் பட்டாரில் தங்கி விட்டு பின்னர் பணிக்கு செல்வார் அதேபோல் கடந்த 3ந் தேதி இரவு பணிக்கு சென்று விட்டார் அதன் பின்னர் விடியற்காலை தனது மனைவி இறந்து விட்டதாக வீட்டில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர் பின்னர் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு பிரயோத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக