காரிமங்கலம்‌ கீழ்சவுளுப்பட்டி கிராமத்தில் பனங்கள் விற்ற மரம் ஏறும் தொழிலாளி கைது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 25 மார்ச், 2024

காரிமங்கலம்‌ கீழ்சவுளுப்பட்டி கிராமத்தில் பனங்கள் விற்ற மரம் ஏறும் தொழிலாளி கைது.

மாதிரி படம்.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம்  அடுத்த கீழ்சவுளுப் பட்டி கிராமத்தில் பனை மரத்தில் அனுமதி இன்றி பனங்கள் இறக்குவதாக காரிமங்கலம் போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது, இதையடுத்து காரிமங்கலம்  போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்றனர்.


அப்போது பனை மரத்தில் இருந்து கள்இறக்கி விற்பனை செய்து கொண்டிருந்த நபரை பிடித்து விசாரனை செய்ததில் கீழ் சவுளுப் பட்டி  கிராமத்தை சேர்ந்த நாகராஜ்  (வயது.31)  என்பதும், அனுமதி இன்றி சட்டவிரோதமாக பனை மரங்களில் இருந்து பனங்கள் இறக்கி விற்பனை செய்தது தெரிய வந்தது,


அதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 10 லிட்டர் பனங்கள்ளை பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad