அரூர் தொகுதி வளர்ச்சியடைய முழுமையாக பாடுபடுவேன் பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி உறுதி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 30 மார்ச், 2024

அரூர் தொகுதி வளர்ச்சியடைய முழுமையாக பாடுபடுவேன் பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி உறுதி.


அரூர் தொகுதி வளர்ச்சி அடைய முழுமையாக பாடுபடுவேன் என தேர்தல் பிரச்சாரத்தில் பாமக வேட்பாளர் சௌமியாஅன்புமணி தெரிவித்தார், அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரூர் தொகுதி வளர்ச்சியடைய முழுமையாக பாடுபடுவேன் பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி உறுதி. 


வேடப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி  பெயரில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது  ஆஞ்சநேயரை மனம் உருகி சாமிதரிசனம் செய்தார் பின்னர் திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார் இதில் அரூர் பகுதி பின்தங்கிய பகுதி என யாரும் சொல்லகூடாது இந்தபகுதியை  வளர்ச்சி அடைய பாடுபடுவேன் அரூர் பகுதி மக்கள் வேலை தேடி வெளிமாநிலங்களுக்கு செல்கின்றனர் அதை தடுக்கும் வகையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் இங்குள்ள பகுதி கடும் வரட்சியால் உள்ளது அதனால் தொழிற்பேட்டை அமைப்பேன் உங்களின் அன்பும் ஆதரவும் எப்போதும் எனக்கு தேவை என கூறினார்.


இதில் பாமக எம்எல்ஏக்கள் ஜி.கே மணி வெங்கடேஸ்வரன்  மாவட்ட செயலாளர் அரசாங்கம் அல்லிமுத்து திருவேங்கடம் வன்னியர் சங்க மாவட்ட தலைவர் கோவிந்தராஜ்  கூட்டணி அமமுக டி.கே.ராஜந்திரன் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ஆர்.முருகன் பாஜக முன்னாள் எம்எல்ஏ ஏ.பாஸ்கர் பிரவின் சாமிக்கண்ணு அரூர் நகர தலைவர் ஜெயக்குமார் அமமுக மாவட்ட துணை செயலாளர் ஏகநாதன் ஒன்றிய செயலாளர்கள்  தரணிராஜ் கண்ணதாசன் அறிவழகன் ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் குமார், அரங்கநாதன், தமாக நிர்வாகிகள் அரவிந்தன், மாதையன்,   உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad