அரூர் அடுத்த பைரநாயக்கன்பட்டி கிராமத்தில் வேளாண்மை துறை அட்மா திட்டத்தில் உழவர் திருவிழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 6 மார்ச், 2024

அரூர் அடுத்த பைரநாயக்கன்பட்டி கிராமத்தில் வேளாண்மை துறை அட்மா திட்டத்தில் உழவர் திருவிழா.


அரூர் அடுத்த பைரநாயக்கன்பட்டி கிராமத்தில் வேளாண்மை துறை அட்மா திட்டத்தில் உழவர் திருவிழா துணை வேளாண்மை அலுவலர் திரு கோவிந்தராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொண்டு உயிர் உரங்கள் அசோஸ்பைரில்லம்  பாஸ்போ பாக்டீரியா ரைசோபியம் ஆகியவற்றின் பயன்கள் பற்றியும் உயிர் பூஞ்சான கொல்லிகள் டிரைக்கோ டெர்மா விரிடி சூடோமோனாஸ் ப்ளோரோசன்ஸ் மற்றும் நுண்ணூட்டக் கலவை ஆகியவற்றின் பயன்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள்.

இந்நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர் திரு சிவன் அவர்கள் கலந்து கொண்டு பிரதம மந்திரியின் கௌரவ நிதி திட்டம் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள் மேலும் இந்நிகழ்ச்சியில் வேளாண் இயந்திர கருவிகள் பற்றியும் அவற்றின் பயன்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள் மேலும் இந்நிகழ்ச்சியில் வேளாண் விற்பனை மற்றும் வணிகம் உதவி அலுவலர் திரு பாண்டுரங்கன் அவர்கள் கலந்து கொண்டு மதிப்பு கூட்டுதல் பற்றியும் வேளாண் விலை பொருட்கள் விற்பனை நிலவரங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்கள்.


இந்நிகழ்ச்சியில் பட்டு வளர்ச்சி துறை உதவி ஆய்வாளர் திருமதி ரம்யா அவர்கள் கலந்து கொண்டு பட்டு வளர்ச்சி துறை மானிய திட்டங்களை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள் மேலும் இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி அலுவலர் திரு செஞ்சுரியன் அவர்கள் கலந்து கொண்டு தோட்டக்கலை துறையில் உள்ள மானிய திட்டங்களை விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்கள் மேலும் இந்நிகழ்ச்சியில் கால்நடை துறை உதவி அலுவலர் திரு அழகிரி அவர்கள் கலந்து கொண்டு கால்நடை துறையில் உள்ள தொழில்நுட்பங்களை எடுத்துக் கூறினார்கள்.


இந்நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர் திரு ரசூல் அவர்கள் கலந்து கொண்டு  சிறுதானியங்கள் சாகுபடி குறித்தும் சிறுதானிய பயன்பாடுகள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்கள் மேலும் இந்நிகழ்ச்சியில் உதவி தொழில் நுட்ப மேலாளர் திரு சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு உழவன் செயலி பதிவிறக்கம் பற்றியும் உழவன் செயலியின் பயன்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள் மேலும் நிகழ்ச்சியில் வட்டார தொழில் நுட்ப மேலாளர் திரு செந்தில்குமார் அவர்கள் கலந்து கொண்டு அட்மா திட்ட செயல்பாடுகள் குறித்தும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள்.


இந்நிகழ்ச்சியில் இயற்கை விவசாயம் முன்னோடி விவசாயிகள் திரு முருகன் மற்றும் திரு கிருபாகரன் அவர்கள் கலந்து கொண்டு இயற்கை விவசாயத்தின்  பயன்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்கள் மேலும் இந்நிகழ்ச்சியில் வட்டார உழவர் ஆலோசனை குழு தலைவர் திரு மதி அவர்கள் கலந்து கொண்டு விவசாயிகளிடம் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுமாறு கேட்டுக் கொண்டார்கள் மேலும் இந்நிகழ்ச்சியில் திரு கோவிந்தசாமி மற்றும் அழகேசன் உட்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad