குத்தலஅள்ளி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 மார்ச், 2024

குத்தலஅள்ளி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள, குத்தலஅள்ளி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில்,  தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நீலமேகம் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.


தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வினை  பிப்ரவரி  மாதம் கடந்த 3 ஆம் தேதி நடைப்பெற்றது. இப்பள்ளியை சேர்ந்த 12 மாணவ - மாணவிகள் தேர்வு எழுதினர். இத்தேர்வு முடிவுகள் பிப்ரவரி, 28 ம் தேதி நேற்று வெளியானது. இதில் இப்பள்ளியை சேர்ந்த ஜனனிஸ்ரீ, ஜமுனாதேவி ஆகியோர் தேர்வு பெற்றனர்.


அதனை தொடர்ந்து 2 மாணவிகளுக்கும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நடைப்பெற்ற பாராட்டு விழாவில், ஊராட்சி மன்ற தலைவர் சங்கோதிசத்யபிரபு, பள்ளி மேலாண்மை குழு தலைவர் கற்பகம்மதியழகன், பள்ளி தலைமை ஆசிரியர் சகாயமேரி, ஆசிரியர்கள், ஊர்கவுண்டர்கள், பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad