தர்மபுரி அரசு கலைக் கல்லூரி சமூக சேவை மன்றம் மற்றும் நாட்டு நலப்பணி திட்டத்தின் ஒருங்கிணைப்பில் பாராளுமன்ற மக்களவை பொது தேர்தல் 2024 - முதல் முறை வாக்காளர்களுக்கு சிறப்பு விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சி இன்று 23/ 3/2024 காலை 11 மணியளவில் கல்லூரி புதிய கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முனைவர் க.சபாபதி துணைத் தலைவர் சமூக சேவை மன்றம் &வரலாற்றுத் துறை இணைப்பேராசிரியர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் கோ. கண்ணன்* அவர்கள் தலைமையுரை உரையாற்றினார். மாவட்ட வருவாய் அலுவலர் திருமிகு செ.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் அவர்கள் 100% வாக்குப்பதிவு இந்திய தேர்தல் ஆணையத்தின் இலக்கு, வாக்களிப்பது ஒவ்வொருவரினுடைய கடமை மட்டுமல்ல உரிமையும் கூட உள்ளிட்ட கருத்துக்களையும், வாக்களிப்பது ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமை என்ற கருத்துக்களோடு *வாக்காளர் உறுதிமொழியும்* மேற்கொள்ளப்பட்டது.
கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் கு. பாலமுருகன் அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். நாட்டு நலப்படுத்திட்ட அலுவலர் முனைவர் இரா சந்திரசேகரன் இயற்பியல் துறை இணை பேராசிரியர் அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தர்மபுரி அரசு கலைக் கல்லூரி சமூக சேவை மன்றம் மற்றும் நாட்டு நல பணித்திட்டத்தின் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக