தொட்டார்தன அள்ளி முனியப்பன் கோயில் அருகே சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய டிராக்டர் பறிமுதல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 24 மார்ச், 2024

தொட்டார்தன அள்ளி முனியப்பன் கோயில் அருகே சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய டிராக்டர் பறிமுதல்.


தர்மபுரி மாவட்டடம், பாலக்கோடு அடுத்துள்ள தொட்டார்தன அள்ளியில் அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்து சட்டவிரோதமாக பாறைகளை வெட்டி கருங்கல் கடத்துவதாக, பாலக்கோடு தாசில்தார் ஆறுமுகத்திற்க்கு இரகசிய தகவல் கிடைத்தது, உடனடியாக சம்பவ இடத்திற்க்கு சென்று பார்த்த போது தொட்டார்தனஅள்ளி முனியப்பன் கோயில் அருகே டிராக்டரில் சிலர் கருங்கற்களை ஏற்றி கொண்டிருந்தனர்.


தாசில்தாரை கண்டதும் அனைவரும் தப்பி ஓடி தலைமறைவாகினர். விசாரனையில் பாலக்கோடு புதுபட்டானியர் தெருவை சேர்ந்த திருப்பதி (வயது.45) என்பதும். இவரது சொந்தமான டிராக்டரில் கருங்கற்கள் கடத்தியது தெரிய வந்தது. 2 ஆயிரம் மதிப்புள்ள கருங்கற்களுடன் டிராக்டரை பறிமுதல் செய்து பாலக்கோடு போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தார்.


இதுகுறித்து தாசில்தார் ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான திருப்பதியை தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad