பாலக்கோட்டில் அட்மா திட்டத்தின் மூலம் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் வளர்ப்பு முறைகள் குறித்த பயிற்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 6 மார்ச், 2024

பாலக்கோட்டில் அட்மா திட்டத்தின் மூலம் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் வளர்ப்பு முறைகள் குறித்த பயிற்சி.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாரம், கடத்திகொள்மேடு கிராமத்தில் அட்மா திட்டத்தின் மூலம் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் வளர்ப்பு முறைகள் குறித்த பண்ணைப்பள்ளி பயிற்சி நடைப்பெற்றது. இப்பண்ணைப்பள்ளி பயிற்சிக்கு தருமபுரி உழவர் பயிற்சி நிலையம் வேளணமை துணை இயக்குநர் குணசேகரன் தலைமை தாங்கி காட்டு பன்னி, மயில் மற்றும் எலி கட்டுபாட்டு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.

குண்டல்பட்டி கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் கண்ணதாசன் அவர்கள் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு தடுப்பூசி மற்றும் நோய் மேலாண்மை முறைகள் குறித்து விளக்கமளித்தார். பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய கால்நடை மருத்துவர் தங்கதுரை அவர்கள் ஆடுகளின் இனப்பெருக்கம் மற்றும் குடல்புழு நீக்கம் குறித்து எடுத்துரைத்தார்.


தருமபுரி உழவர் பயிற்சி நிலையம் வேளாண்மை அலுவலர் தேவி அவர்கள் உழவன் செயலி பதிவிறக்கம் குறித்து விழிப்புணர்வு அளித்தார். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் மகேஷ்வரி அவர்கள் ஆடுகளுக்கு தீவன மேலாண்மை குறித்து விளக்கினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அருள்குமார் பயிற்சிக்கு முன்னேற்பாடுகள் செய்து 25 க்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad