கோபிநாதம்பட்டியில் மாநில ஊரக வாழ்தார இயக்கம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி வருவாய் கோட்டாச்சியர் தொடங்கி வைத்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 27 மார்ச், 2024

கோபிநாதம்பட்டியில் மாநில ஊரக வாழ்தார இயக்கம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி வருவாய் கோட்டாச்சியர் தொடங்கி வைத்தார்.


அரூர் அருகே உள்ள கோபிநாதம்பட்டியில் மாநில ஊரக வாழ்தார இயக்கம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இப்பேரணியில்  மகளிர்சுய உதவிகுழு உறுப்பினர்கள் ஊரக வாழ்வாதார இயக்க வட்டார மேலாளர் அறிவழகன் ஒருங்கிணைப்பு செய்தார். வருவாய் கோட்டாச்சியர் வில்சன்ராஜசேகர் கலந்து கொண்டு பேரணியை தொடங்கிவைத்தார்.

முன்னதாக கோபிநாதம்பட்டி ஊராட்சி  அலுவலகத்தில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து உறுதிமொழி எடுத்து கொண்டனர் இப்பேரணி கோபிநாதம்பட்டியில்  ஊர்வலமாக சென்றனர்  பின்னர் ஊராட்சி  அலுவலகத்தில் வரையப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கோலத்தை பார்வையிட்டனார்.


இந்நிகழ்ச்சியில் வட்டாச்சியர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமு வருவாய் ஆய்வாளர்கள்  முருகன் கார்த்திக்  கிராம நிர்வாக அலுவலர்கள்  மோனிக் நாகராஜ் அருண் மதியழகன் ராஜா, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad