தேர்தல் நேரங்களில் மட்டும் நீர்ப்பாசன திட்டங்களை கையில் எடுக்கும் அரசியல் கட்சிகள்- கண்ணீர் விடும் விவசாயிகள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 28 மார்ச், 2024

தேர்தல் நேரங்களில் மட்டும் நீர்ப்பாசன திட்டங்களை கையில் எடுக்கும் அரசியல் கட்சிகள்- கண்ணீர் விடும் விவசாயிகள்.


தருமபுரி மாவட்டம் கடுமையான வறட்சி மிகுந்த பகுதியாகவும், விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் பெரிய நிறுவனங்கள் என்று இல்லாமல் இருப்பதால் இளைஞர்கள், விவசாயிகள் கூலி தொழிலாளியாக பல்வேறு மாநிலங்களுக்கு வேலை தேடி செல்லும் ஒரு மாவட்டமாக உள்ளது.


மாவட்டத்தில் பிரதானமாக செல்லக்கூடிய ஒகேனக்கல் காவேரி ஆறு மற்றொரு பகுதியில் தென்பெண்னை ஆறு  செல்லக்கூடிய நிலையில் வருடதோரும் உபரிநீராக 50டிஎம்சி தண்ணீர் கடலில் கலக்கின்றது. 


ஆனால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, காரிமங்கலம், பென்னாகரம், அரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆறு, கிணறு, ஏரி ஆகியவை வறண்டு நிலத்தடி நீர் 40 ஆண்டுகள்  இல்லாத அளவில்  கடும் வறட்சி ஏற்பட்டு, நிலத்தடி நீர் மட்டம்  சுமார் 1500 அடிக்கும் கீழ் சென்றுள்ளது.


திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட ஓகேனக்கல் குடிநீர் திட்டத்தை அதிமுக ஆட்சியில் கைவிடுவதும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரும் நீர்ப்பாசன கால்வாய் திட்டங்களை திமுக ஆட்சியில் புறக்கனிப்பதும் வாடிக்கையாகி உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி யில் பாதிக்கப்படுவது தருமபுரி மாவட்ட விவசாயிகளும் பொதுமக்களும் தான்.


திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் மாறி மாறி வெற்றி பெற்றாலும், காட்சிகள் மாறவில்லை என்றும் தேர்தல் நேரத்தில் மட்டும் நீர் பாசன திட்டங்களை உடனடியாக செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளிப்பதாக விவசாயிகள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.


மேலும் தேர்தல் நேரத்தில் காசு பணம் துட்டு என்று கைவரிசை காட்டி விட்டு கடைசியில் அரசியல் கட்சிகள் விவசாயிகளையும் பொது மக்களையும் வஞ்சிக்கும் ஒரு நிலையில் உள்ளதாகவும் இதனால் வாழ்வாதாரத்தை இழந்து பல்வேறு மாநிலங்களுக்கு கூலி வேலைக்கு செல்வதால் காலகாலமாக இப்பகுதியில் விளைவிக்கக் கூடிய தென்னை, கரும்பு, நெல், வாழை, தக்காளி, மரவள்ளிகிழங்கு, மாங்காய் வகைகள் வரும் காலங்களில் பெரும் அழிவை நோக்கி செல்லும் எனவும் தருமபுரி மாவட்டம் பாலைவனமாக மாறி வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad