புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மாவிளக்குடன் மேளதாளத்துடன் அனைவருக்கும் மாலை அணிவித்து ஊர்வலமாக வந்து கிராம மக்களுக்கு அரசு பள்ளியில் மாணவர்களை சேர்த்தால் கல்வி உதவித் தொகை, கல்வி உபகரணங்கள், கணினி பயிற்சி, போன்று அனைத்தும் அரசு பள்ளியில் இலவசமாக வழங்கப்படுகிறது இதை கிராம மக்கள் தனது மாணவச் செல்வங்களை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று விழிப்புணர்வு செய்தனர்.
மாணவர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது அதை தொடர்ந்து பள்ளி ஆண்டு விழாவும், நடைபெற்றது இவ்விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் மா. ரேணுகாதேவி அவர்கள் தலைமை தாங்கினார் பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலை வைத்தார் பள்ளி ஆசிரியர் சீர்.விஜயன் விழாவிற்கான ஏற்பாட்டை செய்தார் இவ்விழாவில் கயல்விழி ஆசிரியர் மற்றும், தீபா,பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர், ராசி தமிழ், மா. ரத்தினவேல் பஞ்சாயத்து துணைத் தலைவர் ஊர் முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் அருகாமை பள்ளி ஆசிரியர்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக