சமூக நலத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தின் கீழ் அலுவலர்களுக்கான பயற்சி வகுப்பு நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 மார்ச், 2024

சமூக நலத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தின் கீழ் அலுவலர்களுக்கான பயற்சி வகுப்பு நடைபெற்றது.


தருமபுரி மாவட்டம், அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் சமூக நலத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தின் கீழ் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த களஅலுவலர்களுக்கான பயற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (01.03.2024) நடைபெற்றது.


பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண் குழந்தைகளின் நலனைப் பாதுகாக்கவும், அவர்ளின் கல்வி முன்னேற்றத்திற்காகவும் புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். பெண் குழந்தைகளின் நலனை பாதுகாக்கவும், அவர்களின் கல்வியை உறுதிப்படுத்தவும் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் தொடங்கப்பட்டது. 


2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு, குழந்தை பாலின விகிதத்தில் (CSR) விரிவான மற்றும் குறிப்பிடத்தக்க சரிவை வெளிப்படுத்தியது. இது 1000 ஆண் குழந்தைகளுக்கு 918 பெண் குழந்தைகள் என்ற மிகக் குறைந்த அளவாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 35 மாநிலங்களில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேசிய சராசரியை விட குறைவான பிறப்பு விகிதத்தை கொண்டிருந்தன. 


எனவே, குறைந்த குழந்தை பாலின விகிதத்தின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும் சோதனை அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, விரிவுபடுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டது. பாலின சார்ந்த பாலினம் அறிந்து கருக்கலைப்பு செய்வதை தடுத்தல், பெண் குழந்தைள் உயிர் வாழ்வதையும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல், பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பங்களிப்பை உறுதி செய்தல் போன்றவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.


பள்ளி கல்வித்துறை, மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை, காவல் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் கள அலுவலர்களுக்கு இத்திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இன்றைய தினம் பயிற்சி வழங்கப்படுகிறது. திட்டத்தில் பங்கேற்கும் அனைத:து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும்.


பிறப்புக்கு முன்பு பாலின அடிப்படையில் கரு கலைப்பு செய்யப்படுவதை தடுக்கும் விதமாக அனைத்து ஸ்கேன் மையங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு மேற்கொள்வதோடு, இத்தகைய ஸ்கேன் மையங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், இதுகுறித்து தகவல்களை பொதுமக்கள் மூலம் அறியும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கையை அதிகரிக்கவும், தக்கவைக்கவும் போதிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உயர்கல்வியில் பெண்குழந்தைகளின் சேர்க்கையினை அதிகரிக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுள்ள புதுமைப்பெண் திட்டம், பெண் குழந்தைகளின் நலனை பாதுகாக்க செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 


ஆண், பெண் பிறப்பு பாலின விகிதத்தை தெரிவிக்கும் தகவல் பலகைகள் கிராமங்களில் வைக்க வேண்டும். குழந்தை திருமணம் நடைபெறாமல் தடுக்க போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் குழந்தைகள் பாலின விகிதத்தை மேம்படுத்த அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.


இப்பயற்சி வகுப்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு குறுந்தகட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் இன்று வெளியிட்டார்கள். மேலும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு படங்களை ஒளிபரப்பும் வாகனத்தினை கொடியசைத்து தொடங்கிவைத்தார்கள்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.இளங்கோவன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.அமுதவல்லி, இணை இயக்குநர் (மருத்துவம்) மரு.சாந்தி, துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.ஜெயந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.பவித்ரா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.செல்வம், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பத்ஹூ முகம்மது நசீர் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad