தருமபுரி அருகே பாளையம் சுங்கச்சாவடியில் சந்தேகத்திற்கிடமாக வந்த ஏ டி எம் வாகனம் ஒன்றினை பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டதில் வாகனத்தில் சுமார் 180 கிலோ தங்க ஆபரண நகைகள், 250 வெள்ளி நகைகள் இருக்கலாம் என கண்டுபிடிக்கபட்டிருக்கிறது, உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நகைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் ஆபரண நகைகளாக செய்யப்பட்டு தருமபுரி வழியாக பெங்களூரு நகை கடைகளுக்கு வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது....வணிக வரித்துறை மற்றும், வருமான வரித்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு நகைகளுக்குண்டான ஆவணங்களை எடுத்துவருமாறு உரியவர்களிடம் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக