தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு மாவட்ட மருத்துவமனையில் உலக செவித்திறன் தினத்தை முன்னிட்டு இலவச காது மூக்கு மற்றும் தொண்டை மருத்துவ முகாம் தர்மபுரி மாவட்டம் மருத்துவ இணை இயக்குனர் சாந்தி அவர்களின் வழிகாடுதலின்படி பென்னாகரம் அரசு மாவட்ட மருத்துவமனை முதன்மை மருத்துவர் கனிமொழி மற்றும் காது மூக்கு தொண்டை மருத்துவர் பாலாஜி, மருத்துவர் நித்யா மற்றும் செவிலியர்கள் பங்கேற்று பொது மக்களுக்கு இலவச காது மூக்கு தொண்டை பரிசோதனை செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் புற நோயாளிகள் என 250 பேர் கலந்து கொண்டனர். இதில் 30 நபர்களுக்கு ஆடியோ கிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமில் மாண்புமிகு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் காதொளி கருவிகள் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பென்னாகரம் அரசு துவக்க பள்ளியில் மாணவர்களுக்கு காது, மூக்கு, தொண்டை விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக