தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி அருகே உள்ள தொட்லாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன மாரியப்பன் (74) இவர் புளி அடிக்கும் கூலித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கடந்த 9 வருடங்களுக்கு முன்பு நோய் வாய்ப்பட்டு இறந்துவிட்டார் பின்பு தனது மகனுடன் ஒன்றாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று மதியம் அ.பாப்பாரப்பட்டியில் புளியமரம் ஒன்றில் புளி அடித்துக் கொண்டிருந்தார் அப்பொழுது தவறி கீழே விழுந்து இறந்துவிட்டார் இவரது மகன் ரவி பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக