அதனை தொடர்ந்து குத்துவிளக்கு பூஜை, வள்ளி தெய்வானை திருமணத்தை தொடர்ந்து முக்கிய நாளான பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, இன்று காலை பாலக்கோடு ஸ்ரீ திரெளபதியம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் அலகு குத்துதல், கரகம் எடுத்தல், காவடி எடுத்தல், பால்குடம் எடுத்து நகரத்தின் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக நடந்து சென்று திருமுருகப் பெருமான் கோயிலை அடைந்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து, திருமுருகபெருமானுக்கு அதிகாலை முதலே பல்வேறு வாசனை திரவியங்கள் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சிமன்ற துனைத் தலைவர் சின்னசாமி, மந்திரி கவுண்டர் சரவணன், தர்மகர்த்தா முருகன் மற்றும் பேளாரஅள்ளி, மல்லசமுத்திரம், எருமாம்பட்டி, செம்மநத்த கிராமத்தை சேர்ந்த ஊர்கவுண்டர்கள், மந்திரி கவுண்டர்கள், பொதுமக்கள், என ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக