தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், அடுத்த பி அக்ரஹரத்தில் நபார்டு நிதி உதவியுடன் தமிழ்நாடு கிராம வங்கி பி. அக்ராகரம் கிளை வழியாக, குறிஞ்சி ரிசோர்ஸ் சென்டர் தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடன் பாதுகாப்பான நிதிசார் கல்வித் திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் பாதுகாப்பான டிஜிட்டல் வங்கி சேவை அனுபவத்திற்கான நல்ல நடைமுறைகள், செய்யவேண்டியவை. செய்யக் கூடாதவை பற்றியும். ஒருங்கிணைக்கப்பட்ட பண பரிமாற்றம் யுபிஐ செயலி பற்றியும், பாரத பிரதமரின் ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டம் பற்றியும் தமிழ்நாடு கிராம வங்கி பி. அக்ரஹாரம் கிளை மேலாளர் சந்திரகுமார் தெளிவாக எடுத்துக் கூறினார். குறிஞ்சி ரிசோர்ஸ் சென்டர், செயல் இயக்குனர் இளையராஜா வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் சுய உதவி குழு புத்தக எழுத்தாளர் மகேஸ்வரி அவர்கள் நன்றி கூறினார். இதில் 100க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக