யுனிக்‌ அக்ரி இந்தியா புராடக்ட்ஸ்‌ நிறுவனத்தில் பணமிழந்தார்கள் கவனத்திற்கு.. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 2 மார்ச், 2024

யுனிக்‌ அக்ரி இந்தியா புராடக்ட்ஸ்‌ நிறுவனத்தில் பணமிழந்தார்கள் கவனத்திற்கு..


தருமபுரி மாவட்டத்தில்‌ இயங்கி வந்த யுனிக்‌ அக்ரி இந்தியா புராடக்ட்ஸ்‌ பிரைவேட்‌ லிமிடேட்‌ நிறுவனத்தின்‌ மீது 10 வருடத்திற்கு முன்பு பதியப்பட்ட வழக்கை தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவில்‌ தொடர்‌ புலன்‌ விசாரணை .

தருமபுரி மாவட்டம்‌, நான்கு ரோடு அருகில்‌, DRM காம்பளக்ஸில்‌ இயங்கி வந்த யுனிக்‌ அக்ரி இந்தியா பிராடக்ட்ஸ்‌ பிரைவேட்‌ லிமிடெட்‌ நிறுவனத்தை கடந்த 2010 முதல்‌ 2014 ஆண்டு வரை 

  1. யுனிக்‌ அக்ரி இந்தியா புராடக்ட்ஸ்‌ பிரைவேட்‌ லிமிடெட்‌ 
  2. முருகன்‌ தபெ நடேசன்‌ 
  3. ரத்தினவேலு த/பெ கோவிந்தசாமி 
  4. தனபால்‌ த/பெ கண்ணுகவுண்டர்‌ காரிமங்கலம்‌, தருமபுரி மாவட்டம்‌ 
ஆகியோர்கள்‌ கூட்டாக சேர்ந்து தினமும்‌ ரூ.10, 20, 50, 100, 200, 500, 1000 என அவரவர்‌ வசதிக்கேற்ப 17 மாதம்‌ செலுத்தினால்‌, 18-வது மாத இறுதியில்‌ 12% வட்டியுடன்‌ முதிர்வு தொகை வழங்கப்படும்‌ என்றும்‌, முகவர்களுக்கு வசூல்‌ தொகைக்கு ஏற்ப கமிஷன்‌ வழங்குவதாக ஆசை வார்த்தை கூறியதில்‌ மனுதாரர்‌ மற்றும்‌ அவருடன்‌ 7 முகவர்கள்‌ சேர்ந்து அவர்கள்‌ மூலமாக 1000-த்துக்கும்‌ மேற்பட்ட வாடிக்கையாளர்களிடமிருந்து வாங்கி கொடுத்த ரூ.54,97,48,047.00/- பணத்தை பெற்றுக்கொண்டு அவர்கள்‌ கொடுத்த வாக்குறுதியை மீறி பொதுமக்கள்‌ டெபாசிட்‌ தொகையை திருப்பிதராமல்‌ ஏமாற்றி மோசடி செய்துவிட்டு மேற்படி நிதி நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டதாகவும்‌ மோசடி செய்த மேற்படி நபர்கள்‌ மீது நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர்‌ உ.வெங்கடேசன்‌ (40) த/பெ பூவன்‌, அண்ணாநகர்‌, பாலக்கோடு, தருமபுரி மாவட்டம்‌ என்பவர்‌ கொடுத்த புகாரின்‌ பேரில்‌ கடந்த 24.06.2014-ம்‌ தேதி தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு குற்ற எண்‌ : 30,2014 சட்டப்பிரிவுகள்‌. 120(B), 406, 420 IPC r/w of TNPID act 1997 ஆக வழக்கு பதிவு செய்யப்பட்டு, தற்போது இவ்வழக்கு தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாறுதல்‌ செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில்‌ இருந்து வரும்‌ இவ்வழக்கில்‌ தொடர்‌ புலன்‌ விசாரணை மேற்கொள்வதால்‌, மேற்படி யுனிக்‌ அக்ரி இந்தியா புராடக்ட்ஸ்‌ பிரைவேட்‌ லிமிடெட்‌ நிறுவனத்தில்‌ சேர்ந்து பணத்தை முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள்‌ யாரேனும்‌ இருப்பின்‌ உடனடியாக தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில்‌ தங்கள்‌ வசம்‌ உள்ள அசல்‌ ஆவணங்களுடன்‌ புகார்‌ கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அலுவலக முகவரி: காவல்‌ ஆய்வாளர்‌, பொருளாதார குற்றப்பிரிவு, வள்ளுவர்‌ நகர்‌, ஒட்டப்பட்டி, தருமபுரி. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad