அரூரில் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 28 மார்ச், 2024

அரூரில் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு


அரூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது, இந்நிகழ்ச்சிக்கு பாமக நகர செயலாளரும் பேரூராட்சி உறுப்பினருமான பேக்கரி பி. பெருமாள் தலைமை வகித்தார். பாஜக நகர தலைவர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார், இதில் அமமுக ஆட்சிமன்ற குழு உறுப்பினரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஆர்.ஆர்.முருகன் கலந்து கொண்டு தேர்தல் அலுவலகம் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ஸ்டீல் சதாசிவம், பாமக மாநில செயற்குழுா உறுப்பினர் திருவேங்கடம், முன்னாள் மாநில துணை பொது செயலாளர் ஆ.வே.ரா பிரசாந்த், மாவட்ட தலைவர் அல்லிமுத்து, மாவட்டத் துணைத் தலைவர் பழனிசாமி, ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், சேகர், பழனி, சிவக்குமார், கமலஹாசன், கோவிந்தன், கோன்றி, வன்னியர் சங்க ஒன்றிய தலைவர் ரமேஷ், ஊடக பேரவை மாவட்ட இணை செயலாளர் வெங்கடேசன், பேரூராட்சி உறுப்பினர் அன்புமணி, பிரபு, சிங்காரம், பெரியசாமி, பாஜக நிர்வாகிகள் சாமிக்கண்ணு,  நகர பொதுச்செயலாளர் ஆனந்தன், அரூர் மேற்கு ஒன்றிய தலைவர் சௌந்தரராஜன், நகர செயலாளர் விவேகானந்தன், கலையரசன், அமமுக ஒன்றிய செயலாளர் கண்ணதாசன், மாரியப்பன் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் அரவிந்தன் மற்றும் அனைத்து தேசிய கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad