தருமபுரியில் "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை" திட்டம் குறித்த குறும்படம் வெளியீடு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 5 மார்ச், 2024

தருமபுரியில் "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை" திட்டம் குறித்த குறும்படம் வெளியீடு.


தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதினால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு விழா தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில்  நடைபெற்றது.

குறும்படத்தினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வெளியிட்டார், இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பி பழனியப்பன், கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் தருண், மேனாள் மக்களவை உறுப்பினர் தாமரைச்செல்வன், எம் ஜி சேகர், மாவட்ட துணை செயலாளர் அ.மணி, பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.சரவணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சி.முத்துக்குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சந்திரசேகர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், சிவகுரு, வெங்கடேஸ்வரன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தமிழழகன், துணை அமைப்பாளர்கள் ஷண்முகம், ராஜ்குமார், இலக்கிய அணி அருண் உதயசூரியன், மாவட்ட மகளிர் அணி கவிதா, சாந்தருபி,  ரேணுகாதேவி, விளையாட்டு அணி துணை அமைப்பாளர் சசிகுமார்,  மற்றும் தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த ஏராளமான திமுக கட்சியினர் கலந்து கொண்டனர்.


இந்த குறும்படத்தினை மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் அவர்களின் மகன் ப.எழில்மறவன் தயாரித்திருந்தார். திரைக்கதை, வசனம், எம்.எஸ்.பி.மணிபாரதியும், கதை பேட்ரிக் அந்தோணியும், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஜெயராம் கோபால் காட்சிபடுத்தி படத்திற்கு உயிரோட்டமாக  ஜே.எஸ்.ஆர் இசை அமைத்துள்ளார்.  


திராவிடப் பார்வை பாகம் -1 மகளிர் உரிமைத் தொகை குறும்படம், குடும்பத்திற்காக வாழ்நாள் எல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு கொடுக்கும் அங்கீகாரம், பெண்களின் வாழ்வாதரத்தை அங்கிகரிப்பதோடு  சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு வழிவகுக்கும் என்று  தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் சொன்னதை போல இந்த குறும்படம் அமைக்கப்பட்டு அனைவரையும் வெகுவாக கவர்ந்ததுள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad