தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் (Nodel officers) பொறுப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 27 மார்ச், 2024

தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் (Nodel officers) பொறுப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம்.


பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024ஐ முன்னிட்டு, தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் (Nodel officers) பொறுப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் தருமபுரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் திருமதி.அருணா ரஜோரியா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024ஐ முன்னிட்டு, தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் (Nodel officers) பொறுப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் தருமபுரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் திருமதி.அருணா ரஜோரியா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், காவல் பொது பார்வையாளர் திரு. விவேக் ஷியாம், இ.கா.ப., அவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில் இன்று (27.03.2024) நடைபெற்றது.


இதுகுறித்து தருமபுரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் தெரிவித்ததாவது: இந்திய தேர்தல் ஆணையத்தால், பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024 தொடர்பான தேர்தல் அறிவிப்பு அட்டவணையானது 16.03.2024 பிற்பகல் வெளியிடப்பட்டது. இதன் ஒருபகுதியாக தமிழ்நாட்டில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் முதல் மற்றும் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.


தருமபுரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி), மேட்டூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளின் 1,016 வாக்குச்சாவடி மையங்கள், 1,805 வாக்குச்சாவடிகளில் மொத்தம் 15,12,732 வாக்காளர்கள் உள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை விசாரணை செய்ய மற்றும் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க பறக்கும் படை குழுக்களும் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன.


தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் தெரிவிக்க C-Vigil App, elections2024.dpi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி, 1800 425 7017 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 9363754335 என்ற எண்ணிற்கு வாட்சப் குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவிக்கலாம். தருமபுரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணியில் ஈடுபடும் தேர்தல் அலுவலர்களுக்கு முதற்கட்டமாக தேர்தல் பயிற்சியும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி சுழற்சி முறையில் (Randomization) தேர்வு செய்து பிரித்து அனுப்பும் பணிகளும் நடைபெற்றுள்ளது.


தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவை உறுதிசெய்திடும் வகையில் பொறுப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தேர்தலில் பங்கேற்பது மற்றும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை வாக்காளர்களிடையே ஏற்படுத்திட வேண்டும். வாக்குச் சாவடியில் நியாயமான மற்றும் சுதந்திரமான வாக்குப் பதிவு நடைபெறச்செய்வதை உறுதி செய்திட வேண்டும் என தருமபுரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் தெரிவித்தார்.


மேலும், தருமபுரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை பார்வையிட்டு வரப்பெறும் புகார் மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள விவரங்களை கேட்டறிந்தார். மேலும், ஊடக சான்று மற்றும் ஊடக கண்காணிப்பு மையத்தினை (MCMC) ஆய்வு செய்து, வேட்பாளர்கள் சார்பாக செய்யப்படும் விளம்பரங்கள் குறித்து தொலைக்காட்சி, உள்ளுர் தொலைக்காட்சிகள் மற்றும் தினசரி நாளிதழ்களில் வரும் விளம்பரங்கள் பதிவு செய்து, வேட்பாளர்களின் தேர்தல் செலவினத்தில் கொண்டு வருவது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினர்.


மேலும், தருமபுரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) மற்றும் மேட்டூர் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து தேர்தல் பொது பார்வையாளர் அவர்களது 9363962216 என்ற கைப்பேசி எண்ணிலும் (அல்லது மின்னஞ்சல் முகவரி generalobs2024.dpi@gmail.com) தேர்தல் பொது பார்வையாளரது தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள வட்டாட்சியர் திருமதி.எஸ்.ரேவதி அவர்களின் கைப்பேசி எண்:9994390925 என்ற எண்ணிலும், தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து தருமபுரி பொதுப்பணித்துறை பயணியர் மாளிகையில் தேர்தல் பொது பார்வையாளர் அவர்களிடம் காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை நேரில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.


தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க காவல்துறை பொதுபார்வையாளர் திரு.விவேக் ஷியாம்,இ.கா.ப., அவர்களை 9363065268 என்ற கைப்பேசி எண்ணிலும், காவல்துறை பொதுப்பார்வையாளரது தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள உதவி காவல் ஆய்வாளர் திரு.ஜவஹர் குமார் அவர்களின் கைப்பேசி எண் 9443155011 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.


இந்த நிகழ்வுகளின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.கௌரவ் குமார் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் திருமதி.ஆர்.பிரியா, மேட்டூர் சார் ஆட்சியர் திருமதி.என்.பொன்மணி, உதவி தேர்தல் அலுவலர்கள், தேர்தல் பொறுப்பு அலுவலர்கள், அனைத்து வட்டாட்சியர்கள், தேர்தல் துணை வட்டாட்சியர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad