பாலக்கோடு சர்க்கரை ஆலை முன்பு புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் 134 - வது பிறந்தநாள் விழாவில் பெண்களுக்கு இலவச சேலை வழங்கி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

பாலக்கோடு சர்க்கரை ஆலை முன்பு புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் 134 - வது பிறந்தநாள் விழாவில் பெண்களுக்கு இலவச சேலை வழங்கி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சர்க்கரை ஆலை முன்பு புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் 134- வது பிறந்தநாள் விழா  தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் இரா. திருப்பதி தலைமையில் நடைபெற்றது. 


சர்க்கரை ஆலை முன்பு புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள்  மாநில துணை செயலாளர் மா.இராஜகோபல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு  50-க்கும் மேற்பட்ட  பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கி இனிப்புகள் வழங்கினார்.


இதில் பாலக்கோடு ஒன்றிய செயலாளர் கே. பி. செல்வம் முன்னிலை வகித்தார். மற்றும் கட்சியின் நிர்வாகிகள் ஆத்துர்னஅள்ளி முருகன். விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் என ஏராளமான கலந்து கொண்டு அம்பேத்கரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி  பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad