தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மூங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி நஞ்சுண்டன், இவரது மகன் மிதுன் சக்ரவர்த்தி (வயது.17) பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து வருகிறார். இவர் தனது மொபட்டில் பாலக்கோடு சென்று விட்டு இன்று இரவு 8 மணிக்கு வீட்டிற்க்கு வந்துள்ளார்.
இவரது வீட்டின் முன்பு வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மொபட் அருகில் இருந்த இவர்களுக்கு சொந்தமான 60 அடி ஆழ கிணற்றில் விழுந்தது. கிணற்றில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதுகுறித்து பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த சிறப்பு நிலை அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயனைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி, மாணவனை பத்திரமாக உயிருடன் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக