நாடாளுமன்ற தேர்தலையொட்டி 3 நாட்கள் அரசு மதுபான கடைகள் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 12 ஏப்ரல், 2024

நாடாளுமன்ற தேர்தலையொட்டி 3 நாட்கள் அரசு மதுபான கடைகள் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


தருமபுரி மாவட்டத்தில் எதிர்வரும் 17.04.2024 காலை 10.00 மணி முதல் 19.04.2024 நள்ளிரவு 12.00 மணி வரை (Poll Day) மற்றும் 04.06.2024 (Counting of Votes) ஆகிய நாட்களில் பாராளுமன்ற பொது தேர்தல்-2024 நடைபெறுவதால் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின்கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள், FL-3, FL-3A/ FL-4A உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள் / முன்னாள் இராணுவ வீரர் கேண்டீன் ஆகிய அனைத்தும் மதுபானங்கள் விற்பனை இன்றி செயல்படாமல் மூடி வைக்கவும் இதன் மூலம் உத்தரவிடப்படுகிறது. 

மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மதுவிற்பனையில் ஈடுபட்டாலோ சட்டப்படியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad