பாப்பாரப்பட்டியில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்; காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 22 ஏப்ரல், 2024

பாப்பாரப்பட்டியில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்; காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி பகுதியில்  பாப்பாரப்பட்டி காவல் நிலைய காவல் ஆய்வாளர் குமரவேல் உத்தரவின் பேரில் பாரப்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே காவல் உதவி ஆய்வாளர் மாரி மற்றும் உதவி காவல் ஆய்வாளர் ராஜாராம் ஆகியோர் வாகன தணிக்கை மேற்கொண்டு வந்தனர். 

அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி  வாகனத்தில் இருந்த இரண்டு இளைஞர்களை விசாரித்ததில் அந்த இளைஞர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தனர் அதில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்கள் இருசக்கர வகணத்தையும் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில்  கடத்தி செல்ல இருந்த மூன்று கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து பின்னர் இரண்டு இளைஞர்களையும் அவர்கள் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தையும் காவல்துறையினர் கைப்பற்றி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் பனைகுளத்தைச் சேர்ந்த செல்வம் மகன் கார்த்திகேயன் வயது 18 மற்றொருவன் வெள்ளாள முத்தூரைச் சேர்ந்த முருகேசன் மகன் தமிழரசன் வயது 23 என்பதும் தெரிய வந்தது மேலும் விசாரித்தபோது இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் கோயம்புத்தூரில் இருந்து ஓசூருக்கு விர்ப்பனைக்காக கஞ்சா கடத்தி சென்றது தெரிய வந்தது.   பின்னர் காவல்துறையினர் அவர்களிடமிருந்த 3 கிலோ கஞ்சாவையும் அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad