தருமபுரி மக்களவை தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் இல்லங்களுக்கு சென்று அஞ்சல் வாக்கு பெரும் பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 4 ஏப்ரல், 2024

தருமபுரி மக்களவை தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் இல்லங்களுக்கு சென்று அஞ்சல் வாக்கு பெரும் பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.


பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024ஐ முன்னிட்டு, தருமபுரி மக்களவை தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் இல்லங்களுக்கு சென்று அஞ்சல் வாக்கு பெரும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024ஐ முன்னிட்டு, தருமபுரி மக்களவை தொகுதிக்குட்பட்ட தருமபுரி நகராட்சியின் நெசவாளர் காலனி, குமாரசாமிபேட்டை மற்றும் கடத்தூர் ஊராட்சி ஒன்றியம், மணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் இல்லங்களுக்கு சென்று அஞ்சல் வாக்கு பெரும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (04.04.2024) ஆய்வு மேற்கொண்டார்.


இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் முதல் கட்டமாக ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. பாராளுமன்ற பொதுத்தேர்தலின் ஒருபகுதியாக, கடத்தூர் ஊராட்சி ஒன்றியம், மணியம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் ஜாலிபுதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தேர்தல் நடைபெறும் நாளன்று வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாகவும், அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சார வசதி, கழிப்பறை வசதி, மாற்றுதிறனாளிகள் மற்றும் வயதானவர்கள் வாக்களிக்க சாய்வுதளம் போன்றவைகள் தயார்நிலையில் வைக்க அறிவுரை வழங்கினார்கள்.


மேலும், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறை உள்ளிட்டவற்றை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளையும், பறக்கும் படை குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்களின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்ததோடு, அரசியல் கட்சி மற்றும் வேட்பாளர்கள் ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த முறையாக விண்ணப்பித்து, அனுமதிபெற்ற பின்பு அனுமதிபெற்ற நேரம் மற்றும் இடங்களில் மட்டுமே பிரச்சாரம் மேற்கொள்வதை கண்காணித்திடவும், இந்நிகழ்வுகளில் முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கே முன்னுரிமை அளித்து, அனுமதி வழங்கப்படுவதோடு, தொடர்ச்சியாக அடுத்த அடுத்த விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


முன்னதாக, தருமபுரி நாடாளுமன்றத் தேர்தலில் 24 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் தருமபுரி மாவட்டத்திற்கு கூடுதலாக தேவைப்படும் 670 மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பேலட் யூனிட்கள் வேலூரில் இருந்து கொண்டுவரப்பட்டு, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் ஸ்கேன் செய்து, பாதுகாப்பாக வைப்பறையில் வைக்கும் பணிகளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், தேர்தல் பொது பார்வையாளர் திருமதி.அருணா ரஜோரியா, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.


இந்நிகழ்வுகளின் போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் திருமதி.காயத்ரி, திருமதி.ஷெர்லின் ஏஞ்சலா, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பொறுப்பு அலுவலர் திருமதி.தேன்மொழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு.பிரகாசம், வட்டாட்சியர்கள் திரு.சரவணன், திருமதி.வள்ளி, தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.அசோக்குமார், தேர்தல் பொறுப்பு அலுவலர்கள் உடனிருந்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad