தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள கோயிலூரான் கொட்டாய் சுங்க சாவடி அருகே, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு முருகன் உதவி பொறியாளர். தலைமையிலான பறக்கும் படை குழுவினர் நேற்று மாலை வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர், அப்போது தருமபுரியில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்ததில் வெள்ளிச்சந்தை கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் என்பவர் தேர்தல் நடத்தை விதிகளை மீறி 94, ஆயிரத்து 794 ரூபாய் ரொக்கப்பணம் எடுத்து வந்தது தெரியவந்தது.
தேர்தல் நடத்தை விதிகளை மீறி உரிய ஆவணம் பணம் எடுத்து வந்ததால், அவரிடமிருந்து, பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் பாலக்கோடு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாசில்தார் ஆறுமுகம், துணை தாசில்தார் எழில்மொழி ஆகியோர் முன்னிலையில் பாலக்கோடு சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர். மேலும் பணத்திற்க்கான உரிய ஆவணங்களை ஒப்படைத்து பணத்தை பெற்று கொள்ள அறிவுறுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக