கோட்டூர் மலை கிராமத்திற்கு கழுதைகளுக்கு பதிலாக முதல் முறையாக டிராக்டர் மூலம் சென்ற வாக்கு பதிவு எந்திரம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 18 ஏப்ரல், 2024

கோட்டூர் மலை கிராமத்திற்கு கழுதைகளுக்கு பதிலாக முதல் முறையாக டிராக்டர் மூலம் சென்ற வாக்கு பதிவு எந்திரம்.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர் மலை கிராமத்திற்கு கழுதைகளுக்கு பதிலாக முதல் முறையாக டிராக்டர் மூலம் சென்ற வாக்கு பதிவு எந்திரம். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோட்டூர் மலை. 


அலகட்டு ஏரிமலை உள்ளிட்ட பகுதிகளில் சாலை வசதி இல்லாத காரணத்தால் ஏரிமலை மற்றும் அலகட்டு கிராமத்திற்கு கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் வரை கழுதைகள் மூலம் வாக்கு பதிவு எந்திரங்கள் வாக்குப்பதிவு தேவையான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. 2021 சட்டப்பேரவை தேர்தலை கோட்டூர் மலை கிராம மக்கள் புறக்கணிப்பதாக தெரிவித்து அங்கு வாக்குப்பதிவு நடைபெறவில்லை.  


மலை கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று மாற்று வழியாக மண் சாலை அமைத்து நடவடிக்கை எடுத்ததின்  பயனாக நாளை நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குப்பதிவுக்கு தேவையான அட்டை அழியா மை. விவி பேட் எந்திரம் போன்றவை முதன் முறையாக டிராக்டர் மூலம் மலை அடிவாரத்தில் இருந்து கொண்டு சென்றனர். 


மலை அடிவாரத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் கரடு முரடான மண் சாலையில் காவல்துறை பாதுகாப்புடன்  வருவாய்த் துறையினர் நேரடி பார்வையில்  வாக்கு சாவடி அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் டிராக்டரில் சென்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad