பென்னாகரம் அருகே அடிப்படை வசதிகளுக்காக ஏழு மலை கிராம மக்கள் கருப்புக் கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 2 ஏப்ரல், 2024

பென்னாகரம் அருகே அடிப்படை வசதிகளுக்காக ஏழு மலை கிராம மக்கள் கருப்புக் கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு


தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த மஞ்சநாயக்கன்அள்ளி‌ பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுப்பட்டி, இந்திரா காந்தி நகர் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட  குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி இல்லாமல் தலைமுறை தலைமுறையாக எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். 


இந்நிலையில் புதுப்பட்டியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவு தூரம் மண் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால்  இந்த சாலையில் வாகனங்களில்  செல்லும் போது அடிக்கடி விபத்துகள்  ஏற்பட்டு உயிர் இழப்புகள் ஏற்படுவதாக கூறுகின்றனர்.


மேலும் இந்த வழியில்  108 ஆம்புலன்ஸ் செல்லமுடியாமல் இருப்பதால் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் கர்ப்பிணி  பெண்கள், நோயினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் உரிய நேரத்தில்  செல்ல முடியாததால் அவதிப்பட்டு வருகின்றனர்.


இந்த பகுதி வானம் பார்த்த பூமி என்பதால்  தற்போது மழை இல்லாமல் விவசாயம்  செய்ய முடியவில்லை. ஆடு மாடுகளுக்கு  குடிக்க கூட தண்ணீர்  இல்லாமல் பெரிதும் சிரமப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவு தூரம் சென்று  குடிநீர் எடுத்து வருவதாகவும் இதைப்  பற்றி பலமுறை பஞ்சாயத்து நிர்வாகத்திடமும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை என வேதனை தெரிவிக்கின்றனர். 


எனவே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை இந்த பகுதி மக்கள் புறக்கணிப்பதாக பேனர் வைத்து காலி குடங்களுடன் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad