ஏரியூர் ஒன்றியத்தில் மாநில ஊரக வாழ்தார இயக்கம் திட்டத்தின் திட்ட இயக்குநர் திரு.பத்ஹூ முகமது நசீர் அவர்களின் உத்தரவின் பேரில், வாக்காளர் விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித சங்கிலி விழிப்புணர்வு நடைபெற்றது, அதனை முன்னிட்டு ஏரியூர் பேருந்து நிலையத்தில் கோலமிடுதல், கையெழுத்து இயக்கம் போன்ற நிகழ்வுகள் நடத்தபட்டது.
இவற்றில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர் சந்தோசம், மாநில வளப்பயிற்றுநர் பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலன், வடிவேலன், வட்டார இயக்க மேலாளர் ரமேஷ், உள்ளிட்ட அரசு பணியாளர்களும், மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக