மகாவீர் ஜெயந்தி நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இறைச்சி கடைகளை திறக்க தடை விதித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது, அதனைத் தொடர்ந்து பென்னாகரம் பேரூராட்சி சார்பில், செயல் அலுவலர் சார்பில் நேற்றே, இறைச்சி கடைகளுக்கு விளம்பர நோட்டீஸ் மூலம் கடைகளை அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.
மகாவீர் ஜெயித்த நாளை முன்னிட்டு இறைச்சிக் கடைகளை திறக்கவும், விற்பனை செய்யவோ அனுமதி இல்லை எனவும் மீறி இறைச்சி கடை திறக்கப்பட்டாலோ, விற்பனை செய்தாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து பென்னாகரம் நகரப் பகுதியில் செயல்படும் நூற்றுக்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் அடைக்கப்பட்டன ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கமாக அசைவம் சாப்பிடும் அசைவ பிரியர்கள், கடைகளுக்கு வந்து, கடைகள் திறக்கப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக