தர்மபுரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறைகளுக்கு சீல் வைக்கும் பணி நிறைவு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 20 ஏப்ரல், 2024

தர்மபுரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறைகளுக்கு சீல் வைக்கும் பணி நிறைவு.


தர்மபுரி பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குப்பெட்டிகள் சட்டமன்ற தொகுதி வாரியாக செட்டி கரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இறக்கி வைக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி அவர்கள் தேர்தல் பொது பார்வையாளர் திருமதி அருணா ரெஜோரியா தனித்தனியாக வைக்கப்பட்டுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறைகளுக்கு சீல் வைக்கும் பணிகளை  அனைத்து வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மேற்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட வருவாய் அலுவலர் 6 சட்டமன்ற தொகுதிகளின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வட்டாட்சியர்கள் வருவாய்த்துறை காவல்துறை அலுவலர்கள் இருந்தனர். மேற்கண்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை சுற்றி சி.ஆர்.பி.எப் 24 நபர்கள் தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு 24  நபர்கள்  ஆயுதப்படை காவலர்கள் 24 நபர்கள் உள்ளூர் காவலர்கள் 150 பேர்  என மொத்தம் 222 பேர் ஒரு நாளைக்கு 3 ஷிப்ட்  சுழற்சி முறையில் நான்கு அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad