மாரண்டஅள்ளியில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு போலீசார், துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு ஊர்வலம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 4 ஏப்ரல், 2024

மாரண்டஅள்ளியில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு போலீசார், துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு ஊர்வலம்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளான காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி, மகேந்திரமங்கலம் ஆகிய பகுதியில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் துணை ராணுவ படையினர் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு   காவல் துணை கண்காணிப்பாளர் சிந்து தலைமையில் கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடத்தினர்.

 

தமிழகத்தில் வருகிற 19 -ம் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பொதுமக்கள் பயமின்றி, சுதந்திரமாக  தேர்தலில் வாக்குக செலுத்தும் வகையில் இந்த கொடி  அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பு  பேரணி மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே தொடங்கி  4 ரோடு, கடைவீதி, இராயக்கோட்டை சாலை, வெள்ளிசந்தை சாலை,பை-பாஸ் ரோடு, பேருந்து நிலையம் உள்ளிட்ட  நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.


இந்த பேரணியில், மாரண்டஅள்ளி காவல் ஆய்வாளர் சுப்ரமணி, பாலசுந்தரம், பால சண்முகம், வீரம்மாள் மற்றும் துணை ராணுவம், அதிரடி போலீசார், உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad