தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி, அடுத்த செவத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பாப்பண்னன் (வயது .60) இவரது மனைவி வளர்மதி (வயது.55) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. இளைய மகன் ரமேஷ் (வயது.40) இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்க்கு வருவார், இதனை இவரது அம்மா வளர்மதி கண்டித்து வந்துள்ளார்.
கடந்த 2ம் தேதி மாலை 5 மணிக்கு ரமேஷ் குடித்துவிட்டு வீட்டிற்க்கு வந்தவரை, அவரது தாய் வளர்மதி தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் விறகு கட்டையால் தனது தாயை சராமாரியாக அடித்துள்ளார், இதனை தடுக்க வந்த தந்தை பாப்பாண்ணனையும் விறகு கட்டையால் பலமாக தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமணையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து தாய் வளர்மதி கொடுத்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக