பாலக்கோடு புதிய தேசிய நெடுஞ்சாலையில் அனுகுசாலை பகுதியில் மின்விளக்கு, தகவல் பலகை அமைக்கப்படாததால் இரவு நேரங்களில் ஏற்படும் தொடர் விபத்துக்கள் - வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் அவதி - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 22 ஏப்ரல், 2024

பாலக்கோடு புதிய தேசிய நெடுஞ்சாலையில் அனுகுசாலை பகுதியில் மின்விளக்கு, தகவல் பலகை அமைக்கப்படாததால் இரவு நேரங்களில் ஏற்படும் தொடர் விபத்துக்கள் - வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் அவதி


தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை முதல் பாலக்கோடு வழியாக ராயக்கோட்டை, ஓசூர் வரை புதிய நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது அதிகமான்கோட்டை முதல் காடுசெட்டிப்பட்டி வரை பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில் கனரக வாகனங்கள், சொகுசு கார், பேருந்துகள் என இயக்கப்பட்டு வருகிறது. 

தேசிய நெடுஞ்சாலையில் ஒட்டியுள்ள அதியமான்கோட்டை முதல் கொலசனஅள்ளி வரை நகரங்களை இணைக்கும் அனுகுசாலை பகுதியில் மின்விளக்கு, ஊர் பெயர் பலகை ஆகியவை அமைக்கப்படாததால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வழி தெரியாமல் நீண்ட தூரம் சென்று விட்டு மீண்டும் அதே வழியில் திரும்பி வருவதால் எதிர் எதிரே வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்து நடந்து  உயிர் பலி ஏற்பட்டு வருகிறது. 


மேலும் அணுகுசாலை பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் மின்விளக்கு வசதி, கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் இரவு நேரங்களில் அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. டோல்கேட் அமைக்க ஆர்வம் காட்டும் தேசிய நெடுஞ்சாலை துறையினர், வாகன ஓட்டிகளுக்கு தேவையான போதிய முன் அறிவிப்பு பலகைகள், ஊர் பெயர் பலகைகள், பிரிவு சாலை பகுதியில் மின் விளக்கு உள்ளிட்டவை அமைக்க முன்வராததால் தொடர்ந்து ஏற்படும் உயிர் பலிகளை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad