தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சௌமியா அன்புமணி பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எர்ரப்பட்டி, எட்டி குழி, சின்ன கடமடை ,மஞ்ச நாயகன் அள்ளி, புதுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பொதுமக்களிடையே பேசும்போது சித்திரை திருநாள் வாழ்த்துக்களை கூறி வாக்கு சேகரித்தார். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் சிப்காட் அமைத்து வேலைவாய்ப்பை அதிகளவில் உருவாக்குவேன். நான் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்றால் பிரதமர் மோடி இடம் கூறி இங்கு நிறைய தொழிற்சாலைகளை கொண்டு வந்து வேலைவாய்ப்பை ஏற்படுத்துவேன்.
குடிநீர் பிரச்சினை, காவிரி உபரி நீர்திட்டத்தை நிறைவேற்றவும் மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். உடன் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் உடனிருந்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக