தருமபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகலான காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி, மகேந்திரமங்கலம் அகிய பகுதியில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் துணை ராணுவ படையினர்களுக்கான கொடி அணி வகுப்பு பேரணி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சிந்து தலைமையில் நடைபெற்றது.
தமிழகத்தில் வருகிற 19 -ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மக்கள் பயமின்றி தேர்தலில் அவர்களின் வாக்குகளை செலுத்தும் வகையில் காவல்துறையினர் அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பு பேரணி தக்காளி மார்க்கெட் பகுதியில் துவங்கி வட்டாட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம், கடைவீதி, ஸ்துபி மைதானம், காவல் நிலையம் மற்றும் நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.
இந்த பேரணியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனப்பிரியா, வட்டாட்சியர் ஆறுமுகம், காவல் ஆய்வாளர்கள் பாலசுந்தரம், பாலகிருஷ்ணன், வீரம்மா மற்றும் போக்குவரத்து காவலர்கள், துணை ராணுவம் கர்நாடகா அதிரடி போலீசார் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக