மாவட்ட அளவிலான படச்சுருள் போட்டியில் தர்மபுரி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் முதலிடம்; பரிசுத்தொகையினை வழங்கி கல்லூரி முதல்வர் பாராட்டு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 5 ஏப்ரல், 2024

மாவட்ட அளவிலான படச்சுருள் போட்டியில் தர்மபுரி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் முதலிடம்; பரிசுத்தொகையினை வழங்கி கல்லூரி முதல்வர் பாராட்டு.


தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் வழிகாட்டுதலின்படி 2023-2024 ஆண்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இளைஞர் திருவிழா கொண்டாடப்பட்டது, மாவட்ட செஞ்சுருள் சங்கத்தின் சார்பாக அனைத்து கல்லூரிகளுக்கும் இடையில் HIV,எய்ட்ஸ், ரத்ததான முகாம்,போதை ஒழிப்பு  உள்ளிட்ட பொருள் சார்ந்து விழிப்புணர்வை  ஏற்படுத்தும் வகையில்  நடத்தப்பட்ட படச்சுருள் உருவாக்கப் (REELS) போட்டிகளில் தர்மபுரி அரசு கலைக் கல்லூரி காட்சிப்பதிவியல் துறை மாணவர்கள் சிறப்பான முறையில் பங்கேற்று படைப்புத்திறனை வெளிப்படுத்தி முதலிடம் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

படச்சுருள் போட்டியில் முதலிடம் பெற்ற காட்சிப்பதிவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சரண், காளியப்பன், ஜெரால்டு பெஞ்சமின், யுவபாரதி ஆகிய  மாணவர்களுக்கு பரிசுத்தொகை 2000 ரூபாயினை இன்று 05-04-2024 பிற்பகல் கல்லூரியின் முதல்வர் முனைவர் கோ. கண்ணன், அவர்கள் வழங்கி பாராட்டினார்.


இந்நிகழ்வில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க மேற்பார்வையாளர் திரு.உலகநாதன், காட்சிப்பதிவியல் துறை தலைவர் முனைவர் கோ. பிரபாகரன், விலங்கியல் துறை தலைவர் முனைவர் கே விஜயதேவன், செஞ்சுருள் சங்கத் திட்ட அலுவலர் முனைவர் இரா.சந்திரசேகர் உடற்கல்வி இயக்குனர் முனைவர் கு.பாலமுருகன், உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இருபால் பேராசிரியர்களும் மாணாக்கர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad