மாரண்டஅள்ளி அடுத்த தின்னகுட்லான அள்ளியில் பிரிந்து சென்ற மனைவி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கனவர் கைது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 16 ஏப்ரல், 2024

மாரண்டஅள்ளி அடுத்த தின்னகுட்லான அள்ளியில் பிரிந்து சென்ற மனைவி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கனவர் கைது.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த தின்னகுட்லான அள்ளியை சேர்ந்த சிவக்குமார் (வயது. 43) இவரது மனைவி சுமித்ரா (வயது.33) இவர்களுக்கு திருமணமாகி 11 வயதில், லிரோசன் என்ற மகன் உள்ளார்.


சிவக்குமார் குடிப்பழக்கத்திற்க்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றத்தின் மூலம் சுமித்ரா விவாகரத்து பெற்று அதே பகுதியில் மகனுடன் தனியாக வசித்து வந்தார்.


இந்நிலையில் கடந்த 4ம் தேதி இரவு 8 மணிக்கு சுமித்ரா குடியிருந்த வீட்டிற்க்கு வந்தவர், மீண்டும் சேர்ந்து வாழ அழைத்துள்ளார். இதனால் மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சிவக்குமார் மறைத்து வைத்திருந்த கொடுவாளால் சுமித்ராவை சராமாரியாக வெட்டினார், இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்த சிவக்குமார் தப்பி ஓடி தலைமறைவானார்.


சுமித்ரா தர்மபுரி அரசு மருத்துவமனையில் தீவீர சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுகுறித்து   மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில்  சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad