பாலக்கோடு அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி நேரில் சென்று பார்வையிட்டார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 19 ஏப்ரல், 2024

பாலக்கோடு அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி நேரில் சென்று பார்வையிட்டார்.


தர்மபுரி மாவட்ட நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமகவை சேர்ந்த முனைவர் செளமியா அன்புமணி அவர்கள் போட்டியிடுகிறார்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குசாவடியில் ஏப்ரல், 19, வெள்ளிக்கிழமை, இன்று மாலை 5 மணிக்கு நேரில் பார்வையிட்டு வாக்கு பதிவு அலுவலர்களிடம் பதிவான வாக்கு சதவீதம் குறித்து கேட்டறிந்தார்.


அது சமயம் பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. மாநில தலைவர் பாடி செல்வம், நகர செயலாளர் ராஜசேகர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜவேல், ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad