தருமபுரி நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அபிநயா பொன்னிவளவன் போட்டியிடுகிறார் அவர் இன்று காலை 11 மணிக்கு முறையாக அனுமதி பெற்று பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எர்ரணஅள்ளி, கக்கஞ்சிபுரம், பாலக்கோடு தக்காளி மார்க்கெட், உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்து பாலக்கோடு காவல் நிலையம் அருகே சென்றபோது அங்கு இருந்த அதிமுகவினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் தகராறு ஏற்பட்டது.
அப்போது நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தேர்தல் வாகனத்தின் மீது அதிமுகவினர் கல் வீசி வாகனத்தின் கண்ணாடியை உடைத்தனர். மேலும் நாம் தமிழர் தொண்டர்கள் கிரிராஜ், குவேக் உள்ளிட்ட 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது, மூவரையும் தொண்டர்கள் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா பொன்னிவளவன் பாலக்கோடு காவல் துறையில் இந்த அராஜக சம்பவத்தில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்களையும், இதற்க்கு தூண்டுதலாக இருந்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏவையும் கைது செய்ய வேண்டும் என புகார் அளித்தார்.
தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நேரத்தில் தோல்வி பயத்தால், அதிமுகவினரின் அராஜக செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக