தருமபுரி அருகே ஏரிக்குள் புகுந்திருக்கும் மூன்று காட்டு யானைகள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 13 ஏப்ரல், 2024

தருமபுரி அருகே ஏரிக்குள் புகுந்திருக்கும் மூன்று காட்டு யானைகள்.


கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வனப்பகுதிகள் வறண்டு வரும் நிலையில் உணவு, தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறியுள்ள மூன்று காட்டு யானைகள் இண்டூர் அருகே சிறுகலூரர் ஏரியில் புகுந்திருக்கிறது, தருமபுரி, பாலக்கோடு மற்றும் ஒகேனக்கல் வனத்துறையினர், காட்டு  யானைகள்  கிராமத்திற்குள் புகுந்து விடாதபடி ஏரியை சுற்றிலும் யானைகளை கண்காணித்து வருகின்றனர், வெய்யில் சுட்டெரித்து வருவதால் ஏரியிலுள்ள நீரை பருகிவிட்டு மர நிழல்களில் யானைகள் இருந்து வருகிறது, மாலை நேரத்தல் யானைகள் வெளியே வருவதற்கு வாய்பிருக்கலாம் என்பதால் காட்டுயானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க திட்டமிட்டிருக்கின்றனர்.


ஏரிக்குள் தஞ்சமடைந்திருக்கும் மூன்று காட்டு யானைகளில் இரண்டு ஆண் யானைகள், ஒரு மக்னா யானையாக இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad