தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ அம்பிகேஸ்வரி ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. முதலில் காலை மங்கல இசை, விக்னேஷ்வர பூஜை, கணபதிஹோமம், அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு மகாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் கற்பக விநாயகர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலமும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அம்மனுக்கு பாலபிஷேகம், மகா தீப ஆராதனைக்கு பின் பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட அம்மன் திரு வீதி உலா நடைபெற்றபோது ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக