தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அடுத்த பெரியானூர் கிராமத்தை சேர்ந்தவர் மாது மகன் அஜித்(27). இவர் ஜேசிபி இயந்திர ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் ஏப்ரல் 13ம் தேதி மாலை அஜித் தனது தம்பி சூர்யாவுடன் வீட்டின் அருகேயுள்ள தக்காளி செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார்.
அப்போது மோட்டார் சுவிட்ச் போடுவதற்காக சென்றபோது, அந்த பகுதியில் உள்ள கிணற்றில் அஜித் தவறி விழுந்தார். சத்தம் கேட்டு அங்கு சென்ற சூர்யா அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அவரை காப்பாற்ற முயன்றார். அதற்க்குள் அஜீத் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கிணற்றில் விழுந்த போது அவருக்கு தலையில் அடிபட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதுபற்றி பஞ்சப்பள்ளி போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக