மண்ணின் வளம் பெருக தக்கை பூண்டு செடிகளை பயிரிட விவசாயிகளுக்கு வேண்டுகோள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 23 ஏப்ரல், 2024

மண்ணின் வளம் பெருக தக்கை பூண்டு செடிகளை பயிரிட விவசாயிகளுக்கு வேண்டுகோள்.


மண்ணின் வளம் பெருக தக்கை பூண்டு செடிகளை பயிரிட வேண்டும் என விவசாயிகளுக்கு தர்மபுரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திரு.மு.இளங்கோவன் அவர்கள் அறிவுரை வழங்கி  உள்ளார்.


பயிர்கள் நன்கு வளர விவசாயிகள் ரசாயன உரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் நாளடைவில் மண்வளம் நிரந்தரமாக பாதிக்கும் சூழல் ஏற்படலாம். அதை தவிர்க்க மண்வளத்தை இயற்கையாக அதிகரிக்கும் வகையில் மண்ணுக்கு தழைசத்தை கொடுக்கும் தக்கை பூண்டு செடிகளை பயிரிட வேண்டும் என வேளாண்துறை விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.


இது குறித்து வேளாண்மை துறையினர் கூறுகையில் குறிப்பிட்ட பயிரை அறுவடை செய்தவுடன் இன்னொரு பயிரை பயிரிடுவதற்கு முன் உள்ள இடைவேளையில் மண்ணின் வளத்தை இயற்கையாக பெருக்க தக்கை பூண்டு பயிரிடலாம். இந்த செடிகள் 45 நாட்கள் முதல் 85 நாட்களில்  நன்கு வளர்ந்து விடும். ஒரு ஏக்கருக்கு 10 கிலோ விதைகள் போதுமானது. தண்ணீரும் குறைவாகவே தேவைப்படும். இச்செடிகளின் வேர் முடிச்சுகளில் 80 சதவீதமும் இலைகளில் 30 சதவீதமும் தழைச்சத்து உள்ளது நன்கு வளர்ந்த செடிகளை மடக்கி உழுதுவிட வேண்டும். பின் இந்நிலத்தில் பயிரிடப்படும் எந்த பயிருக்கும் ரசாயன உரத்தின் தேவை இருக்காது.

ஆண்டுக்கு ஒரு முறை இதை பயிரிட்டு நன்கு வளர்ந்த செடிகளை டிராக்டர் கொண்டு உழுது விடுவதால் செடிகள் மண்ணோடு மண்ணாகி   நிலத்துக்கு தேவையான தழைசத்து பெருகி பயிர்கள் ஊட்டம்  பெரும்  இம்முறையை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்று தருமபுரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திரு.மு.இளங்கோவன் அவர்கள்  தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad